

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு 2 நாள் பயணமாக வருகை புரிந்தார். நேற்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைத்த அவர். இன்று அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு சென்றிருந்த பிரதமர் மோடி அங்கிருந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.கூட்ட நெருக்கடி காரணமாக பட்டமளிப்பு அரங்கில் அமர முடியாமல் பக்கத்தில் இருந்த அறைகளில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அங்கு சென்று மோடி அந்த அறையில் கூடியிருந்த மாணவர்களை சந்தித்துவிட்டு அவர்களிடம் கலந்துரையாடி ,கையசைத்துசென்றார்.
