தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலட்சியத்தால் பிளாஸ்டிக் குப்பைகள், அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி – பூதிபுரம் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள். கடைகள், அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு முன்பாக நீண்ட நாட்களாக பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. நீண்ட நாட்களாக பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயமான சூழ்நிலை நிலவுகிறது.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் வணிக உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள், புகார் தெரிவித்தும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது.
எனவே உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




