• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நெகிழிப்பை ஒழிப்புப் பேரணி…

BySeenu

Jul 3, 2026

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், கோவை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நெகிழிப்பை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது.

பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், நெகிழிப்பை ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தெருக்கூத்தை நடத்திக் காட்டினர். மேலும், பொதுமக்களுக்கு பள்ளியின் சார்பில் துணிப்பைகளும், காகிதத்தால் செய்யப்பட்ட பைகளும் விநியோகிக்கப்பட்டு மாணவ,மாணவிகள் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்

மேலும் இப்பேரணியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மகேஷ்குமார், பொது மேலாளர் திரு. பிரகதீஸ்வரன், பள்ளியின் முதல்வர் திருமதி டயானா மற்றும் இருபால் ஆசிரியர்களும் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.