• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை!..

Byமதி

Oct 13, 2021

கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரண்டில் எந்த தடுப்பூசியின் 2 ‘டோஸ்’களையும் செலுத்திக் கொண்டவர்கள் 3-வது பூஸ்டர் டோசாக போட்டுக்கொள்ளும் வகையில்,
ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ என்ற மருந்து நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இது 18 முதல் 80 வயதானவர்களுக்கு செலுத்தலாம்.

இந்த தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனையை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், பலரது உடலில் அதன்மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து வருவதால், சில நாடுகள் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடத்தொடங்கி உள்ளன. வேறு சில நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

இதை தனது விண்ணப்பத்தில் பயாலஜிக்கல்-இ நிறுவனம் சுட்டிக்காட்டி, கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதற்கான அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.