• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மார்ச் வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை

Byகாயத்ரி

Feb 2, 2022

ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 90 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, இரண்டும் லிட்டருக்கு தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையில் 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலால் வரி குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 90வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

இன்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் மார்ச் வரைக்குமே பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அமைந்துள்ளனர்.