தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நகர செயலாளர் பொன்சக்திவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போன்று சிவகாசியில் நகர செயலாளர் அசன்பதூரூதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகாசி சிவன் கோயிலில் அன்னதானத்தை கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து விருதுநகர், ஆமத்தூர், மத்திய சேனை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கலாநிதி, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.பலராம், கழக மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன். மாவட்ட கழக அவைத் தலைவர் விஜயகுமார், விருதுநகர் நகர செயலாளர் நெய்னார் முஹம்மது, பொதுக்குழு உறுப்பினர் அருணாநாகசுப்பிரமணியன், விருதுநகர் மாவ்ட்ட எம்ஜிஆர் விருதுநகர் நகர பேரவை செயலாளர் நாகசுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் தெய்வம், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பிலிப்வாசு, சிவகாசி ஒன்றிய கழக செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ், லட்சுமிநாராயணன், விருதுநகர் ஒன்றிய கழக செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, தகவல் தொழில்நுட்ப மதுரை மண்டல இணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், சிவகாசி மாமன்ற உறுப்பினர்கள் அ.செல்வம், சேதுராமன், சசிக்குமார், நிலானி, ஸ்ரீநிகா, சாந்திசிவநேசன், சாந்தி சரவணக்குமார், கரைமுருகன், மாரீஸ்வரி, அழகுமயில், சந்தணமாரி, விருதுநகர் நகர் மன்ற உறுப்பினர் மைக்கல்ராஜ், வெங்கடேஷ், கரவணன், விருதுநகர் யூனியன் துணைத்தலைவர் முத்துலட்சுமி கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கோவில்பிள்ளை, ரவிச்செல்வம், சின்னதம்பி, காமாட்சி, கர்ணன், கணேசன், திருமுருகன், ஆனந்தராஜ் மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.