பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என ஒரே பெயராக அழைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தங்கவிருமன், காசிராஜா தலைமையில் முத்துக்குமார், அழகர்சாமி, கார்த்திக், தமிழரசன், அழகர்சாமி மற்றும் நிர்வாகிகள் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவில் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் தங்கவிருமன் கூறியது..,
தமிழ்நாட்டில் கள்ளர் மறவர் அகமுடையர் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசால் 1994 ல் அறிவிக்கப்பட்டு கடந்த 11.09 1995 அன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தாள் (அரசு ஆணை எண் G.O.MS.No.348) அரசாணை வெளியிடப்பட்டது ஆனால் அந்த அரசாணையை இதுவரை தமிழக அரசு முறையாக அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 20 முதல் 23 சதவீதம் பேர் வரை தேவர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். எனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் கீழ் தேவர் சமுதாயத்தை அங்கேரிக்கும் வகையில் அரசாணையை முறையாக தமிழ்நாடு அரசு அமல்படுத்தினால் மட்டுயே எங்கள் சமுதாய மக்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முழுமையாக வளர்ச்சியடைய முடியும். எனவே அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளோம் என கூறினார்.