கீழையூர் அருகே உள்ள கருங்கன்னி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் 26 பேருக்கு முதல்வர் வருகையின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்கிட வேண்டும் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாகை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ம் தேதி வந்திருந்தார். இன்றைய தினம் சுமார் 39 ஆயிரம் பயனாளிகளுக்கு 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி சென்றார். இந்த நிலையில் அவர் வருகையை முன்னிட்டு தங்களுக்கு வழங்கப்படுவதாக கூறிய வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க கோரி கீழையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்கண்ணி ஊராட்சியை சேர்ந்த மக்கள் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
முதல்வர் வருகையின் போது கருங்கண்ணி ஊராட்சியை சார்ந்த 26 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதாக கிராம நிர்வாக அலுவலரால் உறுதி செய்து பயனாளிகளிடம் கடந்த 1 ம் தேதியே தெரிவிக்கப்பட்டது. முதல் அமைச்சர் நிகழ்ச்சி நிரல் அட்டவணையிலும் பயனாளிகளின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் 2 ம் தேதி அன்று மாலை கிராம நிர்வாக அலுவலர் வந்து, 26 பயனாளிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட மாட்டாது எனவும் முதல் அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்து விட்டாராம்.
எந்தவித உரிய காரணமும் இல்லாமல் எழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய இலவச வீட்டு மனை பட்டா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே 26 பயனாளிகளுக்கும் அறிவித்தபடி விரைந்து வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.














; ?>)
; ?>)
; ?>)