
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்காக இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தொடங்கி வைத்தார்:

நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச உணவு கூடத்தை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து உணவு கூடத்தை புனிதம் செய்து வைத்த அவர், பொதுமக்களுக்கு மதிய உணவை பரிமாறினார். மேலும் பொதுமக்களுடன் அமர்ந்து ஆயர் சகாயராஜ் மதிய உணவு அருந்தினார். வாரத்தில் இரண்டு நாட்கள் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஆண்டு முழுவதும் உணவு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் பாதிரியார்கள் கலந்து கொண்டனர்.
