• Mon. Mar 17th, 2025

பீட்டர் அல்போன்ஸ் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரித்தார்

இந்தியாவின் 18_வது நாடாளுமன்றத் தேர்தலில் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து, பீட்டர் அல்போன்ஸ் ‘கை’ சின்னத்தில் வாக்கு சேகரித்து சாலை ஓர கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ். அவரது பேச்சில் இந்தியா எங்கிருந்து தொடங்குகிறது என்ற கேள்விக்கு, பனி துயிலும் இமயம் வரம்பில் இருந்து இந்தியா தொடங்குகிறது என்ற சொல் பதத்தை.

நம்முடைய கலைஞர் உலகப் பொதுமறை திருக்குறளை தந்த அய்யன் திருவள்ளுவர் சிலையை குமரி முனை முக்கடல் சங்கமத்தில் நிறுவிய நாள் முதல் இந்தியாவின் தொடக்கம் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் எல்லையை தொட்டது என குறிப்பிட்ட பீட்டர் அல்போன்ஸ்.

நாடு விடுதலை அடைந்தது முதல் 60_ஆண்டுகள் தொடர்ந்த ஜன நாயக உரிமைகள் இன்று மோடியின் ஆட்சியில் ஒவ்வொன்றும் மறுக்கபட்டு வருகிறது. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும். காங்கிரஸ் வேட்பாளர் தம்பி இப்போது செய்து வரும் மக்கள் பணி குமரி மக்களவையில் தொடர்ந்து செயல் படுத்த, இந்திய கூட்டணி கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர்.பினுலால், இந்திய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள், தோழமை கட்சியினர் பெருவாரியாக பங்கேற்றிருந்தனர்.