• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தென்காசி பகுதியில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு அனுமதி..!

Byவிஷா

Apr 26, 2023

தென்காசி பகுதிகளில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புகளைத் துவங்குவதற்கு மாவட்ட ஆட்சியிர் அனுமதி அளித்துள்ளார்.
தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷ் இதுவரை காணப்படாத புதிய தோற்றத்தில் நடிக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். கலையரசன் மற்றும் நிவேதிதா சதீஸ் ஆகியோரும் கூட படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசி மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் பாதுகாப்பு பகுதியில் மிகப் பெரிய செட் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.