தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் நேற்று காலை முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அருவியில் குளிக்க தடை விதித்தனர்.
இந்த நிலையில் அருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்து சீரான நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்துள்ளனர்.
அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.







; ?>)
; ?>)
; ?>)