• Fri. Apr 26th, 2024

காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டி

ByKalamegam Viswanathan

May 29, 2023

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். -தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் ஜி.ராமமூர்த்தி பேட்டி*
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் ஜெய கார்த்தி சமீபத்தில் உயிரிழந்த நிலையில். மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் புதிய தலைவராக ஜி.ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் ஜி.ராமமூர்த்தி கூறுகையில்:
ஜி.ஆர்.ஜெயகார்த்திக் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த பொறுப்பை ஏற்று உள்ளேன். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களிடம் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். அந்த சூழ்நிலை இனி நடைபெறாத அளவிற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். பாரம்பரியமான ஜல்லிக்கட்டு அழிந்து விடக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் பெரிய தீர்ப்பு, நிரந்தர தீர்ப்ப வழங்கியுள்ளது. இதை தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் உலகத் தமிழர்கள் வரவேற்றுள்ளனர்.
பேட்டிராமமூர்த்திதமிழக ஜல்லிக்கட்டு இளைஞா பேரவைதலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *