பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாலக்கரையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அவை; தமிழக பாரம்பரிய விழாவாகவும் , உழைக்கும் விவசாய பெருங்குடி மக்களின் அறுவடைத்திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகின்ற பொங்கல் விழாவை அனைத்து ஒன்றியங்களிலும் சிறப்பாக கொண்டாடுவது எனவும்,
வருகிற 26.01.2026- அன்று தஞ்சையில் நடைபெறும் மகளிரணி டெல்டா மண்டல மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது எனவும்,
பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை அனைத்து ஒன்றியங்களிலும் 3 இடங்களில் ஆண்களுக்கும், 3 இடங்களில் பெண்களுக்கும் நடத்துவது எனவும், அரசு ஊழியர்களின் 22- ஆண்டுகால ஓய்வூதிய கோரிக்கைகளை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலுக்கு, பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசாக ரூ.3000/ வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், 20 – இலட்சம் மாணவர்களுக்கு A1 தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மடிக்கணினி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும்,

மொழிப்போர் தியாகி மூங்கில்பாடி வை.ரெங்கராஜ் மறைவிற்கும்,
ஒதியம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வைத்தியநாதன் மறைவிற்கும்,
ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், தெரணி கிழக்கு கிளைக் கழக செயலாளர் அமுல்ராஜ் மறைவிற்கும், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தென்றல் ரவி தந்தை ரெத்தினசாமி மறைவிற்கும், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய முன்னாள் அவைத்தலைவர் சி.கோபால் மறைவிற்கும், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், தொண்டமாந்துறை ஊராட்சி, விஜயபுரம் கிளைச்செயலாளர் ராஜ் முகமது மறைவிற்கும், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், கூத்தனூர் கிளைச் செயலாளர் செல்லதுரை மறைவிற்கும், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், கண்ணாப்பாடி முன்னாள் கிளைச் செயலாளர் சரவணன் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




