• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மெளரியா செய்தியாளர் சந்திப்பு

BySeenu

Feb 5, 2024

கோவை மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ள பொறுப்பாளர்கள் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தேர்தல் வழிமுறைகள் குறித்தும் தேர்தல் பணி குறித்தும் அதற்கான வழிமுறைகள் வகுக்கவும் கட்சியினருக்கு இந்த கூட்டத்தின் மூலம் அறிவுறுத்தி உள்ளோம், இந்த கூட்டத்தில் நாங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பாக கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து பாராளுமன்ற தொகுதியிலும் எவ்வாறு கட்சி பணி செய்ய வேண்டும் தேர்தல் பணியாற்ற வேண்டும் எவ்வாறு ஒன்றிணைந்து இந்த பணியை செய்ய வேண்டும் என நுணுக்கமாக அறிவுரைகளை வழங்கியுள்ளனர் மிகச் சிறந்த பணியாற்றி வெற்றிக்காக உழைப்பாளர்கள் எங்களுடைய மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பூத் கமிட்டிகளை அமைப்பதற்காக பாடுபடுவார்கள் இன்னும் ஒரு சில இடங்களில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்,

தேர்தல் பணிக்கான வியூகத்தை வகுத்து கூறியுள்ளோம் அதன்படி செயல்பட்டு அவர்கள் வெற்றியை பரிசளிப்பார்கள். யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என எந்த முடிவும் நாங்கள் செய்யவில்லை தலைவர் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்வார்.

கூட்டணியை பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடந்ததாக நடைபெறவில்லை, தலைவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார் எத்தனை தொகுதி என்பதை அவர்தான் முடிவு செய்வார், கூட்டணி உள்ளதா இல்லையா என்பதை கமலஹாசன் தான் அறிவிப்பார் என தெரிவித்தார்.