• Thu. Mar 28th, 2024

மதுரை கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ByKalamegam Viswanathan

Jun 6, 2023

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, அறுவுறுத்தினார்.
இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டி 70 மனுக்கள், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றகோரி 30 மனுக்கள், சாதிச்சான்றுகள் வேண்டி 1 மனு மற்றும் இதர சான்றுகள் நிலம் தொடர்பான 47 மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான 9 மனுக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை தொடர்பான 43 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 53 மனுக்கள் அடிப்படை வசதிகள் கோரியது (சாலை, தெருவிளக்கு, தண்ணீர் குழாய், பேருந்து வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள்) தொடர்பான 7 மனுக்கள் புகார் தொடர்பான 27 மனுக்கள், கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரியது தொடர்பான 12 மனுக்கள், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண்குழந்தைகள் திட்டம் மற்றும் சலவைப்பெட்டி தொடர்பான 20 மனுக்கள், பென்சன் நிலுவைத்தொகை கேட்டல், ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பாக 8 மனுக்கள், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் இராஜாக்கூர் வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் தொடர்பான 80 மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் 45 என, மொத்தம் 452 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில், பிரதமர் ஆவாஸ் யோஜனா – 2023 இந்தியாவின் கிராமப்புற குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 12 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.6.50 இலட்சம் முதலீட்டு நிதி கடனாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *