• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மஹாலயா விழாவுக்குச் சென்ற மக்கள் படகு கவிழ்ந்து உயிரிழப்பு…

Byகாயத்ரி

Sep 26, 2022

பங்களாதேஷில் மஹாலயா விழாவுக்குச் செல்லும் வழியில் கரடோயா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப். 25) பிற்பகல் மஹாலய தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கரடோயா ஆற்றின் நடுவில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டசன் கணக்கில் மக்களை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தின் போது நீரில் மூழ்கியவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும், காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.