• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குசவபட்டியில் மக்கள் எதிர்ப்பு முற்றுகை போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Jun 14, 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குசவபட்டி கிராமத்தில் விவசாய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தனியார் புதிதாக கிரசர் (குவாரி) அமைப்பதற்கு மண் தோண்டிய பொழுது விவசாயிகள் பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து மண் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர் .

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக தமிழக அரசு கனிம வளத்துறை அனுமதித்த நிலையில் சின்ன உடப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெற்ற நிலையில் புதிய கிரசர் மண் தோண்டபட்டது

மிக ஆழமாக மண் தோண்டி பாறைகள் உடைக்கப் பட்டால் நிலத்தடி நீர் விவசாயம் பாதிக்கும் மற்றும் (கிரஷர் ) வெடி வைக்கும் பொழுது கிராமப் பகுதியில் வீடுகள் அதிர்வு ஏற்படும் என்றும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ஊரைவிட்டு காலி செய்யும் நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனை தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குசவபட்டி கிராம பொதுமக்களுக்கும் கிரசர் உரிமையாளருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை அடுத்து தகவல் அறிந்து வந்த பெருங்குடி காவல் துறையினர் த இருத்தரப்பிரனரையும் பேசி சமாதானம் செய்தனர்.

இதனையடுத்து பெருங்குடி காவல் நிலைய சார்பாக கார்த்திகா குசவபட்டி கிராம மக்களிடம் ஒரு வார காலத்திற்குள் கிராம மக்கள் மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர்நீதிமன்றத்தை அணுகி கிரசர் அமைக்க தடையாணை பெற வழிமுறைகளை கூறினார்.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரையும் கலைந்து போகும் படியும் மேற்படி கிரசர் அமையும் இடத்தில் ஒரு வார காலத்திற்கு பணிகள் எதுவும் செய்ய வேண்டாம் என கூறி காவல் துறையினர் அறிவுறுத்தினர்.இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

தமிழக அரசு கனிமவளத் துறை சார்பில் கிரசர் அமைக்க அனுமதி வழங்கியும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.