மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தண்டலை ஊராட்சியில் போன்ஸ் ரிக்ரியேசன் கிளப் என்ற பெயரில் தனியார் மதுபான கூடம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தண்டலை பகுதியில் எந்த ஒரு மதுபான கடையும் இல்லாத சூழ்நிலையில் தற்போது போன்ஸ் என்ற பெயரில் மதுபான கூடம் வருவது இந்த பகுதியில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவே அதனை உடனடியாக கருத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தனியார் மதுபான கூடம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர் இந்த பகுதி பொதுமக்கள்.