• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் குவிந்த மக்கள்…

Byகாயத்ரி

Aug 3, 2022

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காவிரி ஆற்றை மக்கள் வழிபடுவது வழக்கமாக உள்ளது. மேலும் இந்நாளில் பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நீடிக்கவும், திருமணமாகாத இளம்பெண்கள் திருமணம் விரைவில் நடக்கவும் வேண்டி மஞ்சள் கயிறு அணிந்து பிரார்த்தனை மேற்கொள்வர்.

இதுதவிர மூத்தோரை வழிபடுத்தல், இஷ்ட தெய்வ வேண்டுதல்களும் ஆடிப்பெருக்கில் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் கூட மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த முறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளிலும் மக்கள் காலை முதலே ஆற்றங்கரையில் கூடத் தொடங்கியுள்ளனர். திருச்சி காவிரி ஆற்றங்கரை பகுதிகள், மேட்டூர் அணை அய்யனார் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கூடி வருவதால் காவல் பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.