விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருில் உள்ள ரெட்டியபட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஊத்துபட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள கண்மாய் நீரோட்ட பகுதியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் அளவிடவதற்காக வருவாய் துறையினர் வந்ததாக தெரிய வருகிறது. இதை அறிந்த கிராம பொதுமக்கள் அளவையர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். கண்மாயில் இருந்து நீர் வெளியேறும் பகுதியை ஆக்கிரமித்து வருவதாகவும் அதற்கு பத்திரம் மட்டும் பட்டாக்களை தயார் செய்து வருவதாகவும் புகார் அளித்தனர்.

இதனை தடுத்து ஊர் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மீண்டும் அப்பகுதியில் மீட்டுத் தர வேண்டும் என்று புகார் மனு அளித்தனர். இதனை அடுத்து வருவாய் துறையினர் முறையாக உரிய ஆவணங்களை ஆய்வு செய்து கூடிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் பொதுமக்கள் திரும்பி சென்றனர். பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.