வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் சாலை அருகே ராயப்பா நகர் குடியிருப்பு அருகே கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்,பிளாஸ்டிக் கழிவுகளால் அப்பகுதி மக்கள் கடும் அவதி.
அரசு சுத்தம் செய்யும் என எதிர்பார்க்காமல் தனியார் தொண்டு நிறுவனமே களத்தில் இறங்கி அனைத்து குப்பைகளையும் அகற்றி அந்த பகுதியை தூய்மைப்படுத்தி, இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என பதாகை வைத்தனர்.
சென்னை தாம்பரம் அருகே வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் சாலை ஒட்டி வரதராஜபுரம் ஊராட்சியின் ராயப்பா நகர் பகுதி அமைந்துள்ளது இந்த பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இந்த பகுதியில் வசிக்கும் நபர்கள் வேலை, பள்ளி,கல்லூரிக்கு செல்வதற்கு பைபாஸ் சாலை நடுவே போடப்பட்டுள்ள சப்வேவை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பல நாட்களாக சப்வேக்கு பக்கத்தில் காலியாக இருக்கும் இடத்தில் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரும் கோழி இறைச்சி கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள்,இறந்த கால்நடைகள் ஆகியவற்றை வீசி செல்கின்றனர் இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திலும் பல முறை புகார் அளித்தும் அவர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் உதயம் தொண்டு நிறுவனம் என்ற அமைப்பு அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் கோழி இறைச்சிக் கழிவுகள் அனைத்தையும் அகற்றி அந்த பகுதியை சுத்தப்படுத்தி ப்ளிசிங் பவுடர் போடப்பட்டு அப்பகுதியில் யாரும் குப்பைகள் கொட்ட கூடாது என பதாகைகள் வைத்துள்ளனர் மேலும் அங்கு மரக்கன்றுகளும் நட்டு வைத்துள்ளனர், இந்த செயலை ராயப்பா நகர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்,
இதுகுறித்து உதயம் தொன்டுநிறுவனம் தலைவர் நித்தியானந்தம் கூறுகையில்,
இங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் தின்று பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது மேலும் கோழிக்கறிவுகள்,கால்நடை இறந்தால் இங்கு வீசி செல்வதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிருந்து அடையாறு ஆற்றுக்கு இணைப்பு கால்வாய் ஒன்று செல்கிறது அதில் குப்பைகளை கொட்டுவதால் தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு உள்ளது மேலும் சிலர் குப்பைகளை கொட்டி விட்டு கொளுத்தி விட்டு சென்று விடுகின்றனர் இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் பெரும் பாதிப்படைகின்றனர்,
இதனால் அரசு செய்யும் என எதிர்பார்க்காமல் தங்கள் தொண்டு நிறுவனமே களத்தில் இறங்கி இங்கிருக்கும் குப்பைகளை சுத்தமாக அகற்றி குப்பைகளை கொட்ட கூடாது என பதாகைகளும் மரக்கன்று நட்டு வைத்துள்ளோம்.
மேலும் வெளியூரிலிருந்து கோழி இறைச்சி கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள் இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளோம் அவர்களும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்,தினசரி ஊராட்சியில் இருந்து குப்பை எடுக்க தூய்மை பணியாளர்கள் வந்தால் இங்கு யாரும் குப்பை கொட்ட மாட்டார்கள் இவ்வாறு கூறினார்.