தமிழகம் தலை நிமிர தமிழகத்தின் பயணம் என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சியாக மதுரை கைத்தறி நகர் பகுதியில் கிராம பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அதிமுக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்;-

பாஜக சுற்றுப்பயணத்தின் முதல் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற உள்ளது. நாளையில் இருந்து சிவகங்கை செங்கல்பட்டு சென்னை போன்ற இடங்களில் சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து நாங்களும் தற்போது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளோம்
மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவர்கள் பேச இருக்கிறார்கள்.
நாங்கள் கிராமம் கிராமங்களாக சென்று மக்களின் குறைகளை கேட்டு தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையாக தயார் செய்வதற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம்.
இந்த ஆட்சி மாற்றம் வேண்டும். கைத்தறி மக்கள் கூட சொன்னார்கள் குடிநீர் குழாய்க்கே பணம் கேட்கிறார்கள்.
குடிநீர் பிரச்சனை பொறுத்த வரைக்கும் பணம் கேட்காமல் இணைப்பியே துண்டித்துள்ளனர்.
பணம் ஒன்றே குறிக்கோளாக பார்க்கும் ஆட்சி வெகு விரைவில் அகற்றப்பட வேண்டும் அதற்கான முகூர்த்த நாள் இன்று குறிக்கப்பட்டு பிரச்சாரம் இன்று ஆரம்பிக்க உள்ளோம்.
திமுக பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் 50 சதவீதம் சிறுமி மீதான பாலியல் குற்றங்கள் 283 சதவீதம். லாக்கப் டெத் 24 நடந்துள்ளது சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் இருக்கிறார்கள்.
கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர் அது எப்படி நடந்தது யாருடைய குற்றம் அரசாங்கத்துடைய குற்றம் காவல்துறையுடைய குற்றம் காவல்துறையை யார் கையில் வைத்துள்ளன.
காவல்துறையை முதல்வர் கையில் வைத்துள்ளார் ஆனாலும் தினம் தினம் படுகொலை. கிட்னி முறைகேடு வழக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை. எல்லாமே திமுக தான்.
இன்னைல இருந்து கவுண்டன் ஸ்டார்ட் ஆகிறது. நாட்கள் குறிக்கப்படுகின்றது. திமுக ஆட்சியின் நாட்கள் குறைக்கப்படுகிறது.
தமிழகம் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தலைகுனிவான சூழ்நிலையில் உள்ளது.. இந்தத் திட்டங்களும் இவர்களுடைய திட்டமல்ல மத்திய அரசின் திட்டம் தான்.
மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நம் மாநிலத்தை ஏராளமாக நினைக்கக்கூடிய நிலையில் ஆட்சி உள்ளது.

ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகள் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தி மக்களிடம் இந்த விஷயங்களை பேச கூடாது என நினைக்கிறது. அதனாலதான் கரூரில் கேட்ட இடம் ரவுண்டானா கொடுத்த இடம் குறுகலான இடம்.
கரூரில் சம்பவம் நடந்த உடனே கரூர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வருகிறார் அவர் வருவதற்கு முன்பு ஆம்புலன்ஸ் வருகிறது. ரவுடிகள் கையில் பிளேடை வைத்து கிழித்துள்ளனர். மோசமான முறையில் நடந்துள்ளனர்
ஜாதி தலைவர்களின் பெயர் தெருக்களின் பெயராக இருக்க வேண்டிய தேவை இல்லை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை போய் சாதித்தலைவர்கள் என்று சொன்னால் எப்படி ஏத்துக்க முடியும்.
காமராஜர் பசும்பொன் தேவர், வ உ சிதம்பரநாத் முடிவு சாதி தலைவர்கள்.. இவர்களது பெயர் வைக்க கூடாதா.? எல்லா ஊர்களிலும் கலைஞர் பெயர் உள்ளது.
டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமியை தோளிலிருந்து இறக்கினால் இன்னும் விரைவாக செல்லலாம் என கூறியது குறித்த கேள்விக்கு.?
டிடிவி தினகரன் எங்களது கூட்டணியில் இருந்தவர்தான் கூட்டணியின் வரும்போது ஒவ்வொருவரின் ஐடியாவை கேட்டுவிட்டு செய்ய முடியாது.
எடப்பாடி பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கொடி? தொண்டர்களால் சேர்வது தான் இயற்கையான கூட்டணி.
திருமாவளவன் வண்டி மீது இருசக்கர வாகனத்தில் மோதிய விவகாரம்?
ஒரு கட்சித் தலைவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது அவர் முறைத்தார்கள் அடித்தார்கள் தலைவர் அப்படி செய்யலாமா? மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற தலைவர் இப்படி செய்யலாமா சரியான செய்யலா முதலமைச்சர் அனுமதிக்கலாமா..? என்ன தெரிவித்தார்