விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இதனால் கொளுத்தும் வெயிலில் இருந்து குளிர்ச்சியான காலநிலைக்கு மக்கள் திரும்பினர். நேற்று விழுப்புரத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. தரையில் விழுந்த ஆலங்கட்டிகளை கையில் எடுத்து பார்த்து மக்கள் உற்சாகமடைந்தனர். இந்த ஆலங்கட்டி மழையானது தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!
