மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர துணை முதல்வர் சாமி தரிசனம் செய்தார்.

நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது நிறைவேறி இருக்கிறது ஆந்திர துணை முதல்வர் பேட்டி.

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் ஆன்மீக சுற்று பயணமாக தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் பிரசித்திபெற்ற கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் வதற்காக வருகை தந்தார்.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது;
நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது நிறைவேறி இருக்கிறது சிறப்பான தரிசனம் பெற்றேன்.




