மதுரை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர், மதுரை நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படவுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, 11 ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.434.24 இலட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் நிறைவுற்ற திட்டப் பணிகளை நேற்றைய தினமும், இன்றைய தினமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மொத்தம் 78 மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நியாய விலைக்கடை, சமுதாயக் கூடம், பயணியர் நிழற்குடை, அங்கன்வாடி மையம், பள்ளிக் கட்டிடம், நாடகமேடை, உணவு தானியக் கிடங்கு, மதிய உணவு கூடம், பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட பல்வேறு நிறைவுற்ற திட்டப் பணிகளை இன்றைய தினம் 11 ஊராட்சிகளில் ரூ.434.24 இலட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் , மாநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க ஆணை வெளியிட்டதன் அடிப்படையில், மதுரை மாநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மதுரை மாநகர் பகுதியில் நீர்நிலை இல்லாத அரசு புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு 100 சதவிகிதம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர், நேரடியாக வந்து பட்டா வழங்க முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் , தலைமையிலான அரசு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் திறம்பட செயல்படுத்தி வருகிறது என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில், திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தகுதியான மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் மற்றும் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
