மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் பழமையான அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.,
இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.,

இந்நிலையில் பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முதல் நாளான இன்று அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், குடும்ப நன்மைக்காகவும், மழை வேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டியும் குத்து விளக்கு ஏற்றி மஞ்சள்கயிறு, வாழைப்பழம், எலுமிச்சை,மலர்கள், மஞ்சள்,சந்தனம் குங்குமம் வைத்து வழிபட்டனர்.
இதில் பத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.,