• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பறக்கும் ரயில் சேவை குறைவால் அவதிப்படும் பயணிகள்

Byவிஷா

Nov 25, 2024

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தற்போது பறக்கும் ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவை, சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே நிறுத்தப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வந்தது. இதனால் அரக்கோணம், திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக பறக்கும் ரயில் மார்க்கத்தில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க 14 மாதங்களுக்கு பின் கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த சேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்த மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது.
குறைந்த கட்டணம் மற்றும் அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களுக்குச் செல்லும் ரயில்களின் நேரடி இயக்கம் காரணமாக தென் சென்னையில் பறக்கும் ரயில் சேவை நல்ல எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. ஆனால் தற்போது கடற்கரை நிலையத்தில் இருந்து சேவைகளை மீண்டும் தொடங்கிய பிறகும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தட திட்டத்தை தொடங்கும் போதே பறக்கும் ரயில் சேவை தான் முதலில் பாதிப்புக்குள்ளானது.
இதன் காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டும், வேளச்சேரி – கும்மிடிப்பூண்டி இடையே நேரடி ரயில்கள் இயக்கப்படவில்லை. 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் ”வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அரக்கோணம், கும்மிடிப்பூண்டி இடங்களுக்கு நேரடி சேவைகள் ரத்து , ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பின்மை, பீக் ஹவர்ஸில் போதிய சேவைகள் இல்லாததால் பெரும்பாலான பயணிகள் ரயில்களை தவிர்த்து ஆட்டோ, டாக்ஸி போன்ற தனியார் சேவைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தொடக்க காலங்களில் பீக் ஹவர்களில் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் சேவைகள் கிடைத்து வந்தது, தற்போது, 25 நிமிடங்களாகி விட்டது. காலதாமதம் இல்லாத காரணத்தால் தான் பறக்கும் ரயில் சேவையை தேர்தெடுக்கின்றனர். 4வது புதிய வழித்தட திட்டத்திற்காக பார்க் ரயில் நிலையத்தை இடமாற்றம் செய்ததால் சென்டரல் புறநகர் மற்றும் விரைவு ரயில் நிலையங்களுக்கு மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பறக்கும் ரயில் சேவைக்கு மாற்றாக பேருந்துகளில் பயணிக்கும் நிலை உள்ளது எனக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் ” கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் 9 பெட்டிகளை கொண்ட ரயில்களை மட்டுமே இயக்க முடியும். ஆனால் தற்போது 12 பெட்டிகளை கொண்ட ரயில்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. மற்ற அனைத்து புறநகர் ரயில் வழித்தடங்களில் 12 பெட்டிகள் உள்ள நிலையில் நேரடியாக வேளச்சேரியில் இருந்து அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இயக்கப்பட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பறக்கும் ரயில் துறையில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது 140 சேவைகளுக்கு பதிலாக 70 சேவைகள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்”.