மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் வழியாக விக்கிரமங்கலம் சென்ற 65 ஏ என்ற அரசு பேருந்து திடீரென இரவு 8 40 மணியளவில் பழுதாகி நின்றதால் தீபாவளி பர்ச்சேஸ் செய்து வந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அரை மணி நேரத்திற்கு மேலாக வீட்டிற்கு செல்ல முடியாமல் சாலையில் காத்திருந்த அவல நிலை ஏற்பட்டது.

சோழவந்தான் பகுதியில் உள்ள அரசு பேருந்துகள் பராமரிக்கப்படாமல் இயக்குவதால் ஆங்காங்கே திடீரென பழுதடைந்த நிலையில் நின்று விடுகிறது. இதனால் பேருந்தில் செல்லும் பயணிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதே போன்ற சம்பவம் நேற்று இரவு நடைபெற்றது. சோழவந்தான் அடுத்து திருவேடகத்தில் இரவு 8 40 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் வழியாக விக்கிரமங்கலம் செல்லும் 65 ஏ எண் கொண்ட அரசு பேருந்து 50 பயணிகளுடன் இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் மற்றும் விடுமுறை தினம் என்பதால் தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி உள்ளிட்ட பொருட்களை குடும்பத்துடன் சென்று எடுத்து பயணம் செய்தவர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென பழுதாகி நின்றதால் பயணிகள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர் பின்னர் அனைவரும் கீழே இறங்கி அடுத்த பேருந்துக்காக காத்திருந்தனர் சுமார் 9.30 மணி வரை பேருந்துகள் எதுவும் வராத நிலையில் கிடைத்த வண்டிகளை பிடித்துக்கொண்டு தங்கள்சொந்த ஊர் களுக்கு சென்றனர் குடும்பத்துடன் வந்தவர்கள் பைகள் மற்றும் பொருட்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றது பார்க்க பரிதாபமாக இருந்தது தீபாவளி திருநாள் சில தினங்களில் வர உள்ள நிலையில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் மற்றும் பராமரிக்கப்படாத பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்திவிட்டு புதிய பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்