மதுரை மாநகர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் பெரியார் நிலையம் உள்ளிட்ட தென்பகுதிக்கு செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் இரவு நேரங்களில் குறைந்த அளவை இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக சுமார் 11 மணியிலிருந்து இரண்டு மணி மூன்று மணி வரையில் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் இதனால் நள்ளிரவு அதிகம் நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றன. குறிப்பாக ஆரப்பாளையத்தில் இருந்து திருநகர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் செல்ல வேண்டிய நபர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒரே பேருந்தில் ஏறக்கூடிய அவலம் உள்ளதாகவும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வெகுநேரம் காத்துக் கிடக்க வேண்டிய அவலம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை சரி செய்ய மதுரை மாவட்ட போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட இடையே வேலையில் இரவு நேரங்களில் அதிக அளவு பேருந்து இயக்கப்பட்டு பொதுமக்களில் சிரமத்தை போக்க வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?








