• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பாஜக கட்சிக்கு தாவிய நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ…

Byகாயத்ரி

Aug 26, 2022

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் எம்எல்ஏ ஒருவர் திடீரென பாஜகவில் இணைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அருணாசல பிரதேச மாநில எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளார். அக்கட்சியைச் சேர்ந்த ஒரே எம்எல்ஏ அவர்தான் என்ற நிலையில் அந்த ஒரு எம்எல்ஏவும் பாஜக தலைவர் முன்னிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் இணைத்துக்கொண்டார். இதனை அடுத்து 60 உறுப்பினர்களை கொண்ட அருணாசலப் பிரதேச சபையில் ஆளும் கட்சியான பாஜகவின் பலம் 49 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 6 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.