• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ்-யை அழைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு – தமிழ் மகன் உசேன் பேட்டி‌.

Byஜெ.துரை

Feb 7, 2023

ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக வேட்பாளர் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய, ஓபிஎஸ்-யை அழைப்பது குறித்து கட்சியின் தலைமை கழகம் முடிவு செய்யும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி‌.
ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஏ மற்றும் பி படிவங்கள் அடங்கிய ஆவணத்தை, டெலியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பதற்காக அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நேற்றைய தினம் சென்றிருந்தார்.
இன்னிலையில் டெல்லி சென்று நேற்று நள்ளிரவு திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழ் மகன் உசேன் பேட்டி:
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவு படி சுற்றறிக்கை மூலம், வேட்பாளர்களை தேர்வு செய்கின்ற பணியை மேற்கொண்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற வேட்பாளரை தேர்வு செய்தும், பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்கு சீட்டு படிவத்தின் ஆவணங்களை, தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம்.


தர்மத்தின் வாழ்வு இதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்றதன் அடிப்படையில், இரட்டை இலை சின்னத்தை பெறும்படி தேர்தல் ஆணையம் அவைத் தலைவர் என்கின்ற பொறுப்பை உரிமையை எனக்குத் தந்து, வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் பணியை வழங்கிய நிலையில், அந்த ஆவணங்களை ஒப்படைப்பதற்காக டெல்லி சென்று திரும்பி உள்ளோம்.இது தேர்தலில் வெற்றி முகாமிற்கான முதல் படியாக இதை கருதுகிறோம்.நிச்சயமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தலில் நாங்கள் வெற்றிவாகை சூடுவோம்.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவுபடி, முறைப்படி நடத்தியுள்ளோம். மேலும் கழக இடைக்கால பொதுச் செயலாளர் ஆலோசனைப்படி, அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக தென்னரசு அவர்களை முறையாக நடத்தி இருக்கிறோம்
தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு அது குறித்து, கட்சியின் தலைமை கழகம் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.