மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆதித்தமிழர் பேரவை கட்சியின் உத்தப்பநாயக்கனூர் கிளைச்செயலாளர் செல்வி- செல்வம் தம்பதியின் மகன் திருமூர்த்தி – ராஜேஸ்வரி திருமண விழா உத்தப்பநாயக்கனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த ஆதித்தமிழர் பேரவை கட்சி தலைவர் ஆதியமான் மணக்களுக்கு மாவீரன் ஒண்டிவீரன் பகடை , நாங்கள் திராவிடக் கூட்டம் என இரண்டு புத்தகங்களை பரிசாக வழங்கி மணமக்களை வாழ்த்தினார்., பின்னர் மணமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதில் மாவட்டசெயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர் சோணைமுத்து, மாநில பொது செயலாளர் ரவிக்குமார், மாநில துணை பொதுசெயலாளர் கார்த்தி, மாநில மகளீர் அணி செயலாளர் மல்லிகா, மாநகர மாவட்ட செயலாளர் ஆதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
