• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் திமுகவில் கோஷ்டி மோதல்

தென்காசி தெற்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு உச்சகட்ட கோஷ்டி மோதல் காரணமாக மாவட்ட செயலாளர் வருகையை ஒட்டி முன்னாள் நகர கழக செயலாளர் சேகனா வைத்துள்ள ப்ளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டதை தொடர்ந்து கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதுபற்றிய விபரமாவது தி.மு.கழகத்தின் கட்சி வளர்ச்சிக்காக நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு திமு கழகத்தின் 15வது உட்கட்சி தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் பதவியேற்றனர்.
இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படாமல் நிறுத்தி வைத்திருந்தனர். அதன் பின்னர் தென்காசி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் முதலாவதாக ஆலங்குளம் சங்கரன்கோவில் தென்காசி மூன்று சட்டமன்ற தொகுதிகள் தென்காசி தெற்கு மாவட்டத்திலும் கடையநல்லூர் வாசுதேவநல்லூர் ஆகிய இரு தொகுதிகள் வடக்கு மாவட்டத்திலும் இருந்தன. தற்போது சங்கரன் கோவில் தொகுதிக்கு பதில் கடையநல்லூர் தொகுதியை தெற்கு மாவட்டத்தில் இணைத்தனர். வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் இரு தொகுதிகளை வடக்கு மாவட்டமாக மாற்றி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மாவட்ட செயலாளராக நியமனம் செய்தனர்.
இந்நிலையில் கடையநல்லூர் தொகுதி தெற்கு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதை தொடர்ந்து நகர செயலாளர் அப்பாஸ் துணைத் தலைவர் ராஜையா முன்னாள் நகர கழக செயலாளர் முகம்மதலி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் சுந்தரமகாலிங்கம் சிட்டி திவான் மைதீன் உட்பட முன்னாள் நகர கழக செயலாளர் சேகனா தலைமையில் முன்னாள் இந்நாள் நகர வார்டு நிர்வாகிகள் மற்றும் மத்திய தொமுச துணைச் செயலாளர் ஷார்ப் கணேசன் உட்பட பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் முன்னாள் நகர செயலாளர் சேகனா தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் மற்றும் தலைமை கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் படத்துடன் கடையநல்லூர் நகரில் காயிதேமில்லத் திடல் மணிக்கூண்டு அருகிலும் அரசு மருத்துவமனை அருகிலும் இரு பிரம்மாண்ட மான ப்ளக்ஸ் பேனர் வைத்திருந்தார். நேற்று நள்ளிரவு 3 மணி அளவிற்கு பிறகு இரு ப்ளக்ஸ் பேனரிலும் முன்னாள் நகர செயலாளர் சேகனா படம் கிழிக்கப் பட்டிருந்ததை கண்டு திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சேகனா தொண்டர்களுடன் பார்த்து விட்டு அருகிலுள்ள கடைகளின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்து காவல்துறை நடவடிக்கை எடுக்கும். தொண்டர்கள் நிர்வாகிகள் யாரும் அவசரப்பட கூடாது. ஆத்திரமூட்டும் வகையில் யாரையும் பேசக்கூடாது. தலைமை கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். மேலும் மாலையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் வரவேற்பு நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் அப்பாஸ் மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமகாலிங்கம் பொருளாளர் வடகரை முகம்மது ஷெரீப் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி சங்கரசுப்பு முன்னாள் நகர செயலாளர்கள் சேகனா முகம்மதலி மகளிரணி நிர்வாகிகள் ஸை புன்னிசா தமிழ்செல்வி முருகேசன் உஷா ராமச்சந்திரன் நகர்மன்ற துணைத் தலைவர் ரா ஜையா நகர்மன்ற உறுப்பினர்கள் திவான் மைதீன் கண்ணன் (எ) பாலசுப்ரமணியன் ராமகிருஷ்ணன் தொமுச மத்திய சங்க துணைச் செயலாளர் ஷார்ப் கணேசன் 1வது வார்டு காளிமுத்து 11வது வார்டு உமர் மன்னா அப்துல் வகாப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.