நீலகிரி மாவட்டம் உதகையில் வசிக்கும் மக்களின் மிக முக்கிய குடிநீர் வழங்கும் பார்சன்ஸ் வேலி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், எதிர்வரும் மே மாதம் கோடை சீசன் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது …
சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வரை மூக்கூர்த்தி தேசிய பூங்கா போன்ற மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் தொடர்ந்து பெய்த மழையால் பார்சன்ஸ்வேலி அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளது .இதனால் மே மாதம் கோடை சீசன் முடியும் வரை உதகைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது எனவும் தடையில்லா குடிநீர் நகராட்சி சார்பில் தொடர்ந்து வழங்கப்படும். பார்சன்ஸ்வேலி அணை தற்போது முழு கொள்ளளவு எட்டி உள்ளதால் தேவைக்கேற்ப நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மேற்கொள்ளவும் இந்த தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.