• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பேரரிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரரிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரரிவாளனுக்கு 8வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 24-ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில், சிறை விடுப்பை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரை ஆளுநரிடம் கிடப்பில் உள்ள நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத சிறைவிடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் தற்போது பரோலில் தனது வீட்டில் இருந்து வருகிறார். சிறுநீரகக் கோளாறு காரணமாக அவ்வப்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.