புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்வி சேவையில் 8 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கல்விக்கு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு உபகரணங்கள் வழங்க பெற்றோர்கள் முடிவு செய்ததை தொடர்ந்து இன்று பள்ளிக்கு தேவையான பீரோ, வாட்டர் கேன்,மைக் செட் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்களை கல்வி சீரை கல்வித்துறை அதிகாரி டி ஓ ரமேஷ் யூனியனிலிருந்து துவக்கி வைத்தார்.
கல்வி சீர்களை விளம்பர பதாகைகள் கொண்ட வாகனத்தில் சீர்களை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சுற்றி வந்து பள்ளி மாணவ மாணவிகள் குங்குமம் வழங்கி கைத்தட்டி வரவேற்றனர். பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த சீர்வரிசை பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.