மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மிஷன் மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சோலார் மின் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தருமபுர ஆதினம் – 27-வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கி சோலார் மின் நிலையத்தை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாருதி பவர் கன்ட்ரோல் சி. இ. ஒ. ஆனந்தச் செல்வகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சரவணன், பள்ளி மேலாளர் பாஸ்கரன், மற்றும், பள்ளி ஆசிரியர்கள், மானவ மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்