மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை செல்லும் பகுதியில் தங்கப்பாண்டி என்பவரது தேங்காய் குடோனில் சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி செல்லும் கார்கள் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு காலையில் எடுத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தேங்காய் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் தேங்காய் குடோனில் சென்று பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கார்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது உடனடியாக அருகில் இருந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயைஅணைத்தனர்.

இருப்பினும் தீ பற்றி எரிந்ததில் இரண்டு கார்கள் சேதம் அடைந்தது பள்ளி வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக தேங்காய் குடோன் உரிமையாளர் தங்கபாண்டி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








