• Sat. May 4th, 2024

குமரியில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்.., விஜய் வசந்த் எம்.பி பங்கேற்று சுவாமி தரிசனம்

வைணவ திருத்தலங்களுள் 108-யில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.. இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

108வைணவ திருத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்,

இதையடுத்து இந்த வருடம் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஆலயத்தின் முன்பாக அமைக்கபட்ட தங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. தொடர்ந்து ஆலய தந்திரி வஞ்சியூர் அத்தியற மடத்தில் கோகுல் நாராயணரூ கருட இலட்சினை பொறிக்கபட்ட திருக்கொடியேற்றியை ஏற்றி வைத்தார், பத்துநாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலையில் ஆதிகேசவ பெருமாள்சாமி அனந்த வாகனம், கமல வாகனம் பல்லக்கில் சாமி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நடைபெறுகிறது.

தொடர்ந்து 9ஆம் திருவிழாவான ஏப்ரல் 20ஆம் தேதி முக்கிய நிகழ்வான பள்ளிவேட்டை நடைபெறுகிறது. பங்குனி திருவிழாவின் முக்கிய வைபவமான முன்று நதிகள் சங்கமிக்கும் மூவாற்று முகத்தில் ஆறாட்டு வைபவம் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது ,

இன்று நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய் வசந்த் உட்பட, அறநிலையத்துறை குழுவின் தலைவர், உறுப்பினர்கள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *