விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனந்தராமன் (45). இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர். அனந்தராமன் கடந்த 2006 முதல் 2016ம் ஆண்டு வரை வச்சக்காரப்பட்டி ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார்.
தற்போது ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக பெற்றுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், தன்னிடம் பணியாற்றி வரும் குருசாமி என்பவரது திருமணத்திற்காக பூசாரிபட்டி கிராமத்திற்கு சென்ற அனந்தராமன், திருமண விழாவை முடித்துக்கொண்டு காரில் ஏற சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த தலைப்பாகை கட்டிய மர்ம நபர்கள் 4 பேர், அனந்தராமனை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர். ஊராட்சி மன்ற தலைவி ஜெய பாண்டியம்மாளின் கணவரான பாலமுருகன் என்பவருக்கும், அனந்தராமனுக்கும் முன் விரோதம் இருந்து கூறப்படுகிறது. எனவே அனந்தராமன் மரணத்திற்கு முன்பகை காரணமா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.