சென்னை பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லாவரம் கண்ட்டோன்மென்ட் குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சொகுசு கார்களை ஒப்பந்த முறையில் உரிமையாளரிடம் பெற்றுக் கொண்டு சென்னை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்பவர்களிடம் குறைந்த வாடகைக்கு வாகனங்களை வாடகைக்கு
விட்டு சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக இச்சம்பவம் குறித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதற்கட்டமாக இரண்டு கார்கள் மற்றும் ஐந்து கார்களுடைய சாவியினை பறிமுதல் செய்து பல்லாவரம் காவல் நிலையத்தில் கொண்டு சென்றனர். பின்னர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..








