• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அதிமுக செய்த வளர்ச்சித் திட்ட பணிகள் பற்றி பழனிசாமி பேச்சு

Byகாயத்ரி

Feb 7, 2022

சிவகாசியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகளை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம். சிவகாசி குட்டி ஜப்பான் என்று சொல்லுமளவிற்கு சிவகாசி பெயர்பெற்ற நகரமாகும். 2017 ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்அவர்களின் நூற்றாண்டு விழாவில் சிவகாசி நகரம் மாநகராட்சி ஆக்கப்படும் என்று நான் அறிவித்தேன்.

மாநகராட்சிக்கு  5 கோடி ரூபாய் அளவில் புதிய கட்டிடத்தையும் நாங்கள் கட்டி திறந்து வைத்துள்ளோம். பெருமை மிக்க இந்த சிவகாசி மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் அண்ணா திமுக தொண்டர்கள் வெற்றி வாகை சூட வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நிறைந்த இந்தப் பகுதியில் அதிமுக ஆட்சியில்தான் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. இந்த அரசுக் கல்லூரியில் 2500 ஏழை எளிய மாணவர்கள் மாணவிகள் படிக்கும் அளவிற்கு இந்த கல்லூரியை நாங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம். சாத்தூர், அருப்புக்கோட்டை திருவில்லிபுத்தூர் பகுதிகளிலும் அரசு கல்லூரியை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியி்ல்தான். சிவகாசியில் வாறுகால், சாலை அமைக்கவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் கழிவு நீர் வெளியேற்றம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று ராஜேந்திரபாலாஜி என்னிடம் கோரிக்கை வைத்தார். அதனைதொடர்ந்து 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது .

தற்போது அந்த நிதியில் தான் சிவகாசியில் சாலைகள் வாறுங்கல் அமைக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று திருத்தங்கல்பகுதியிலும் 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது . சிவகாசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டத்தை அண்ணா திமுக அரசு உருவாக்கிக் கொடுத்தது. அதன் பயனாக இன்று கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோன்று திருத்தங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியது, திருத்தங்கலில் புதிய பஸ் ஸ்டாண்ட் உருவாக்கிக் கொடுத்தது அதிமுக ஆட்சியில்தான். சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் அளவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக அரசாங்கம். தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக தண்ணீர் வழங்கும் வகையில் கொண்டாநகரம் கூட்டு குடிநீர் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியது அண்ணா திமுக அரசாகும்.

இதேபோன்று சிவகாசி அருகே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம், திருத்தங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிட்டு பணிகளைத் தொடங்கி வைத்தது அண்ணா திமுக அரசாகும். அந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதே போன்று விருதுநகர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்று கேட்டு ராஜேந்திரபாலாஜி என்னிடம் வலியுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து 355 கோடி ரூபாயில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தது அண்ணா திமுக அரசாகும். விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் சட்டமன்ற தொகுதி455 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை அண்ணா திமுக அரசு கொண்டு வந்தது. அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. விருதுநகர் மாவட்டத்தில் 2011ம் ஆண்டுக்கு முன்பு சாலையில் எப்படி இருந்தது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். 2011-ம் ஆண்டுக்கு பிறகு விருதுநகர் மாவட்டத்தில் சாலைகள் எப்படி இருக்கின்றது என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும். அந்த அளவிற்கு சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு உள்ளன.

சிவகாசி பட்டாசு தீப்பெட்டி தொழிலை பாதுகாத்தது அண்ணா திமுக அரசாங்கம். பட்டாசு தொழிலில் 8 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீப்பெட்டிக்கு 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை எங்களது முயற்சியால் 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. பட்டாசிற்கு 28 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று நாங்கள்வலியுறுத்தியதன் காரணமாக 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. சிவகாசியில் பட்டாசு பயிற்சி மையத்தை உருவாக்கியது அம்மாவுடைய அரசாகும். பட்டாசுவிபத்தின் போது பட்டாசு தொழிலை காப்பாற்றும் வகையில் சிவகாசியில் நவீன தீக்காய சிகிச்சை மையத்தை உருவாக்கியது கட்டிக் கொடுத்தது அண்ணா திமுக அரசாங்கம்தான்.  பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கியதும் அண்ணா திமுக அரசுதான். பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்ட சிக்கல்களை தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்றத்தில் அண்ணா திமுக அரசு தனி வழக்கறிஞரை நியமித்து வாதாடியது.  20 அண்ணா திமுக எம்பி களை அழைத்துக்கொண்டு டெல்லியில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை பார்த்து பட்டாசு பிரச்சனைக்கு தீர்வு கண்டது அண்ணா திமுக அரசு. இங்குள்ள முன்னாள்அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.  இப்படி விருதுநகர் மாவட்டத்திற்குபல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது செயல்படுத்தியது அண்ணா திமுக அரசாங்கம் தான்.