புதிதாக தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கி நடத்தி வரும் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் அருகே உள்ள கன்னி சேர்வை பட்டி சேர்ந்த பாக்கியலட்சுமி. இவர் சின்னமனூர் பகுதியில் குடும்ப வன்முறை தடுப்பு திட்டத்தின் கீழ் களப்பணியாளராக பணியாற்றி வந்தார். தற்போது தனியாக ஸ்ரீதேவி தொண்டு நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார்.
இதனால் சின்னமனூர் பகுதியில் ஏற்கனவே எம்எம்எஸ் என தொண்டு நிறுவனம் நடத்தி வரும் தேவானந்த பிரதிக் என்ற பிரபு மனைவி ஷாம்லி தங்களுக்கு தொண்டு நிறுவன தொழில் பாதித்து வருவதாக கூறி, எம்எம்எஸ் நிறுவனர் அவருடைய மனைவி மற்றும் பணியாளர்கள் இவருக்கு நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து தகாத வார்த்தைகளில் பேசி, கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.