• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுவதாகபாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Byவிஷா

Apr 25, 2025

கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவுக்காகவும், பிரிட்டனுக்காகவும் தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளார்.
கடந்த 22ஆம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது, திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும், ஆண்களை குறிவைத்து மட்டுமே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தான், தற்போது உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அதில், “நாங்கள் சுமார் 3 தசாப்தங்களாக அமெரிக்காவுக்கும், பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகளுக்கும் இந்த மோசமான வேலையைச் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். “அது ஒரு தவறு. அதற்காக நாங்கள் துன்பப்பட்டோம். அதனால்தான் நீங்கள் இதை என்னிடம் சொல்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.