• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தூங்குகின்ற புலியை இடரிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும் – மதுரை ஆதீனம் பேட்டி…

ByKalamegam Viswanathan

Apr 27, 2025

பாரத நாடு என்றைக்கும் சமாதானத்தை தான் விரும்புகிறது. . தூங்குகின்ற புலியை இடரிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும். பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி வழங்க வேண்டும். அவர்களுக்கு தண்ணீர் நிறுத்தியது சரிதான், காற்றை கூட அவர்களுக்கு கொடுக்கக் கூடாது என மதுரை ஆதீனம் பேட்டியில் கூறினார்.

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தில் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு மருத்துவமுகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு விலையில்லா ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ECG உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உடல் எடை, இரத்த பரிசோதனை செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது..,

மக்கள் அனைவரும் உடல் நலம் பாதுகாக்கப்பட வேண்டும். இலவச மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளேன். பாகிஸ்தானை தனிமை படுத்தி, உலக நாடுகள் எந்த தொடர்பையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு காரணம் கம்யூனிச நாடான சீனாத்தான் காரணம்.

வக்பு வாரிய சட்ட திருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இன்றைக்கு மத தீவிரவாதத்தை ஈடுபடுவது பாகிஸ்தான், அதனை தூண்டி விடுவது சீனா.

செல்போனில் நல்ல கருத்துகளை பார்க்கவேண்டும், ஆனால் சினிமா மோகத்தால் கொலை, கொள்ளை போன்ற சம்பங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தலைமுறைகள் சினிமா மோகத்தில் சிக்கியுள்ளனர். நடிகரும், தவெக தலைவருமான விஜய் யை பற்றி பேச விரும்பவில்லை.

காஸ்மீர் விவகாரத்தில் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். பாகிஸ்தான் இருக்குமா..? என்று தெரியவில்லை.

ஜவகர்லால் நேரு ஆட்சி காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம். இந்த முறை சரியான பதில் அடி கொடுப்பார்கள். நல்லவராக இருப்பதைவிட வல்லவராக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்பர் ஒன் பிரதமராக மோடி உள்ளார்.

பாரத நாடு என்றைக்கும் சமாதானத்தை தான் விரும்புகிறது. ஆனால் தூங்குகின்ற புலியை இடடிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும்.

இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு தான் ஆதரவாக நிற்கிறது. தீவிரவாதிகளை வளர்ப்பது பாகிஸ்தானில் தான், அவர்களை தூண்டி விடுவது சீனா தான்.

தீவிரவாதத்திற்கு எதிராக நதிநீரை நிறுத்துவது சரியானதுதான். அவர்களுக்கு தண்ணீரை வழங்க கூடாது யார் கூறினாலும் சரி. மனிதாபிமானத்தின் படி தண்ணீர் தருவது சரிதான். ஆனால் அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை. அவர்கள் இந்தியர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள். பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி வழங்க வேண்டும். காற்றை கூட அவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

வீர் சாவாகர் சுதந்திர போராட்ட வீரர் குறித்து, தவறாக பேசக்கூடாது. ராகுல் சின்ன பையன் அவருக்கு ஒன்றும் தெரியாது. ஈழ தமிழர்களை அவர்களது தந்தை ஆட்சியில் தான் கொலை செய்தார்கள்.

வாஜ்பாய் ஆட்சியின் போது கொடுத்த பதிலடியை போன்று இந்தமுறையும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும்.