• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 12, 2025

அமைதியைப் பெருக்கிக் கொள்ள அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்

மனித இனம் தோன்றிய காலந்தொட்டு அறியாமை, உணர்ச்சி வயப்படுதல் என்ற இரண்டு காரணங்களால் குற்றங்கள் இருந்து வருகின்றன.

இயற்கை அமைப்பை அறியாமை, அவ்வாறு அறியாத்தனத்தினால் எழுந்த தன்முனைப்பு காரணமாக உணர்ச்சி வயப்படுதல் என்ற இரண்டு காரணங்களால் மனிதன் துன்பத்தைத் தனக்கும், பிறருக்கும் விளைவித்துக் கொண்டே இருக்கிறான்.

எனவே, உண்மை அறிவு மிக வேண்டும்; பிறந்த நோக்கம் தெரிந்து கொள்ள வேண்டும்; அதன்படி வாழும் நெறியை வகுத்துக் கொண்டு வாழ வேண்டும். அப்போது தான் அமைதியாக இருக்க முடியும்.

அமைதி என்ற வார்த்தை மிக ஆழமுடையது இன்பம், துன்பம் என்ற இருவிதமான உணர்ச்சிகள் தான் பெரும்பாலோருக்குத் தெரியும். இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையே உள்ள மனோநிலைதான் “அமைதி”.

அந்த அமைதியை நாம் எவ்வளவுக்கெவ்வளவு பெருக்கிக் கொள்கிறோமோ, அங்கேதான் அறிவு உயர்வதற்கு இடம் உள்ளது.

இல்லையென்றால் துன்பத்திலும், இன்பத்திலும் அறிவு செயல்படும்போது, அறிவு அனுபவம் பெறலாமேயன்றி அறிவு உயர்வதற்கு முடியாது.

இன்ப துன்ப அனுபவங்களை ஆராய்ந்து, அதிலிருந்து அறிவைப் பெருக்கிக் கொண்டே, இவன் வந்த நோக்கத்தை அடைவதற்கு ஏதுவாக இருப்பது “அமைதி” தான். அந்த அமைதியை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றால், அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அமைதியைக் குலைக்கக்கூடிய சூழ்நிலைகள், செயல்கள் இவைகளையெல்லாம் கண்டு அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும்.

அத்தகைய முறைகளையெல்லாம் ஒருங்கே உடையதுதான் யோகம்.
யோகம் என்றாலும் தவம் என்றாலும் ஒன்று தான். இயற்கையை ஒட்டிய வாழ்வு.

சமுதாயம் தான் இயற்கை என்ற முக்கூட்டு இயக்கங்களையும் உணர்ந்த வாழ்வு.