• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத்துளிகள்

Byவிஷா

Sep 29, 2023

உலகில் இருக்கக் கூடிய பழங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின.
எந்தப் பழம் அதிகச் சுவையுடையது, சிறப்புடையது? என்ற கேள்வி
ஆப்பிள் பழம், செர்ரிப்பழம், அன்னாசிப் பழம், கொய்யாப்பழம், மாதுளம் பழம் எல்லாம் ஒவ்வொன்றும் தானே அதிகச் சுவை உடையது என்று கூறி ஒன்றுக் கொன்று அடித்து கொண்டன.
ஆனால், திராட்சைப் பழம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது.
இதனால் மற்ற பழங்கள் திராட்சை பழத்தை பார்த்து இழிவாக சிரித்தன.
பலாப்பழம் திராட்சைப் பழத்தைப் பார்த்து அன்புடன் நீ ஏன் மவுனமாக நிற்கிறாய்? எனக்குத் தெரியும்.
அதை நீயே உன் வாயால் சொல்ல வேண்டும். அப்போது தான் மற்றப் பழங்களும் உன் தகுதி பற்றி அறிந்து கொள்ளும்,” என்று கூறியது.
நீங்கள் எல்லாருமே தனித்தனியாகவே வருகிறீர்கள். தனித்தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள்.
ஆனால், நாங்கள், ஒரு கூட்டமாக, கொத்தாக வளர்கிறோம். நாங்கள் ஒருவர் வளர்வதற்கு மற்றவர்களுக்கு இடம் தருகிறோம். விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். விற்பனைக்குப் போகும் போதும் கொத்தாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் விலை போவதில்லை.
வாழ்விலும், வளர்ச்சியிலும், மரணத்திலும் நாங்கள் இணைபிரியாமல் இருக்கிறோம்.ஆனால் நீங்கள் யார் பெரியவர்கள் என்று அடித்து கொண்டு இருக்குறீர்கள்? என்றது

மற்ற பழங்கள் வெட்கத்தால் தலைகுனிந்தன.