

சிந்தனைத்துளிகள்
நீக்ரோ ஒருவன் தேவாலயத்துக்கு வந்தான். பாதிரியார் அவனை கருப்பன் என்று கூறி உள்ளேவிட மறுத்தார். பின்பு அவர் அந்த நீக்ரோவிடம், கருப்பர்களும், நாய்களும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எழுதப்பட்ட அட்டையை அவனிடம் காட்டினார். அதை படித்த நீக்ரோ கோபம் கொண்டு அந்த பாதிரியாரை திட்டிவிட்டு சென்றுவிட்டான்.
பாதிரியார் அவனிடம் நீ இப்போது எங்கே போகிறாய்? என்று கேட்டார். அதற்கு அந்த நீக்ரோ நான் கடவுளிடம் சென்று உன்னைப் பற்றி முறையிடப் போகின்றேன் என்றான். அதற்கு அந்தப் பாதிரியார், போ,போ பாக்கலாம் என்று கிண்டலுடன் பேசினார்.
சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த நீக்ரோ தேவாலயத்துக்கு போனான். அப்போதும் அந்த பாதிரியார் அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. மீண்டும் பாதிரியாரை அந்த நீக்ரோ திட்டிவிட்டு, நீக்ரோ கிளம்பினான். பாதிரியார் அவனை நிறுத்தி, முன்பு கடவுளிடம் முறையிடப் போகிறேன் என்று வீராப்பு செய்து விட்டு சென்றாயே, “என்ன உன்னிடம் கடவுள் சொன்னார் “என்று கேட்டார் அந்த பாதிரியார்.
அதற்கு அந்த நீக்ரோ, ஓ!!! அதுவா..ஒன்றுமில்லை… கடவுள் சொன்னார்,
“அந்தப் பாதிரியார் என்னையே உள்ளே விட மாட்டானே, உன்னை எப்படி உள்ளே விடுவான்” என்று சொன்னார் என்று கூறினான்.
பாதிரியார் உள்ளே ஓடி ஒழிந்து கொண்டார்.
