

சிந்தனைத்துளிகள்
உயிரும் உடலும் கொடுத்த தாய் தந்தையரை நேசி. உன் வாழ்க்கை உன் வசப்படும்.
கணவனை கடவுளாகவும் மனைவியை மதி மந்திரியாகவும் நினைத்து வாழும் குடும்பங்களில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்து நிற்கும்.
இன்பமோ, துன்பமோ சகித்துக்கொண்டு ரசித்து வாழ்ந்தால், நாம் வாழும் வாழ்க்கையும் அழகுதான்.
மாதாவின் கண்ணீர்க்கு ஆளாகாதே. பிதாவின் கோபத்தை தூண்டாதே. இரண்டுமே உன் வாழ்க்கை முன்னேற்றத்தின் தடைக்கற்கள்.
நாலுபேரிடம் கருத்துக்கேள். ஆனால் உன் மனது எது சரி என்று கருதுகிறதோ அதை மட்டும் செய். உன் வாழ்க்கை வளமாக இருக்கும்.
வாழ்க்கை என்னும் பூட்டிற்கு அன்பே திறவுகோல். அதை தொலைக்காமல் பார்த்துக்கொள்.
வரவுக்குள் செலவு செய். அதுவே வறுமைக்கு நல்ல மருந்து.
கண் இல்லாதவன், கை இல்லாதவன், கால் இல்லாதவன் இருக்கலாம். ஆனால் வயிறு இல்லாத மனிதன் கிடையாது. வயிறுதான் வாழ்க்கை கற்றுத்தரும் முதல் பாடம்.
பெண்ணும் ஆமையும் ஒன்று. ஒவ்வொரு பெண்ணும் தான் செல்லும் இடமெல்லாம் ஆமையைப்போல் தன் வீட்டையும் சுமந்து செல்வாள்.
வாழ்க்கையை சொர்க்கமாகவோ, நரகமாகவோ அமைப்பது அவரவர்களின் மனமே ஆகும்.
உன்னிடம் உள்ள பலம், பலவீனத்தை அறிந்துகொள். பலவீனத்தை பலமாக மாற்று. உன் வாழ்க்கை உன் கையில் இருக்கும்.
தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளாதவன் ஊரார் பாராட்டுக்கு ஏங்குவது முட்டாள்தனம்.
விதையின் தன்மை விளைச்சலில் தெரியும். மனிதனின் மேன்மை அவன் செயல்பாட்டில் தெரியும்.
அலையால் ஆர்ப்பரிக்கும் கடலும் அழகே. ஆரவாரமாக குதிக்கும் அருவியும் அழகே. அமைதியாய் ஓடும் ஆறும் அழகே. தேங்கி நிற்கும் குளமும் அழகே. அந்தந்த நிலையில் அவைகளை ரசிக்க கற்றுக்கொள்வோம்.
தாயார் பூமியினும் கனமானவள். தந்தையார் வானினும் உயர்ந்தவர்.
போராடி பெறுகின்ற பொருளிலும், போராடி வாழ்கின்ற வாழ்க்கையிலும் எப்போதும் ஓர் இன்ப அதிர்ச்சி இருக்கும்.
விதியை மதியால் வெல்லலாம். மதியை விதியால் வெல்லலாம். நாம் எப்போதும், எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
